வலி வடக்கில் யுவதி கடத்தப்பட்டு துஷ்பிரயோகம்!

வலி வடக்கில் 17 வயது யுவதியொருவர் இளைஞர்கள் இருவரால் கடத்தப்பட்டு பாலியல் துர்நடத்தைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கில் உள்ள பகுதியொன்றில் வசிக்கும் யுவதி நேற்று மாலை, வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள பிரதேசமொன்றிற்கு சென்றுள்ளார். மாலையில் திரும்பி வரும்போது அவரை வழிமறித்த இரண்டு இளைஞர்கள், அவரை கடத்திச் சென்று துர்நடத்தைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.

யுவதி அபயக்குரல் எழுப்பியதையடுத்து, காமுகர்கள் தப்பி சென்றதாகவும், அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காமுகர்கள் இருவரையும் நேற்றிரவு அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர்.

Related Posts