வலி. வடக்கில் மேலும் சில காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு!

வலி. வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்த பொது மக்களது காணிகள் சில நேற்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டன.

வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவில் பளைவீமன்காமம் வடக்கில் உள்ள ஜே.236 கிராம சேவகர் பிரிவிலுள்ள 33 ஏக்கர் தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டன.

கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் பொது மக்கள் இப்பிரதேசத்தை விட்டு வெளியேறிய நிலையில் அவற்றை இராணுவம் கையகப்படுத்தி கொண்டது.

இவ்வாறான நிலையில் தற்போது அந்தக் காணிகளை படிப்படியாக மீள பொது மக்களிடம் கையளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் குறித்த 33 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

Related Posts