நேற்றய தினம் வலிவடக்கின் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் நடைபெறுகின்ற வீடழிப்புகளின் மத்தியில் இந்து ஆலயங்களும் இடித்துடைக்கப்படுவதாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் நேற்று முதலமைச்சர் தலைமையில் இந்து சமய பிரமுகர்கள் குழுவாக பர்வையிட சென்ற சமயமே மாவிட்டபுரம் பகுதியில் உள்ள முதலாவது முன்னரங்க காவல் நிலையில் பாதுகாப்புக்கிருந்த இராணுவத்தினரால் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
ஏமாற்றத்துடன் முதலமைச்சரும் குழுவினரும் யாழ்ப்பாணம் திரும்பியிருந்ததுடன் இது தொடர்பாக இந்து சமய பிரமுகர்கள் மிகுந்த விசனம் தெரிவித்துள்ளனர் இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுடன் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கங்களை ஏற்படுத்த முயலும் ஜனாதிபதி தலைமையிலான அரசின் ஏமாற்று வித்தையை எடுத்து காட்டும் அரசின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி படையினரால் முற்றாக இடித்தழிப்பு