வலி. வடக்கில் மீள்குடியேற்றத்துக்கு வலியுறுத்துவேன்: கெமரூன்

வலி. வடக்கில் மீள்குடியேற்றம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவேன்’ என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்தார்.

DC (2)

யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை இன்று மேற்கொண்டிருந்த பிரித்தானிய பிரதமர் வலி. வடக்கில் முகாம்களில் வசிக்கும் மக்களை இன்று பிற்பகல் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த மக்களிடம், நீங்கள் எவ்வாறு இடம்பெயர்ந்தீர்கள்? உங்களுடைய காணிகளை யார் வைத்திருக்கின்றார்கள்? இவ்வளவு காலமும் ஏன் மீள்குடியேறாமல் இருக்கின்றீர்கள்? போன்ற கேள்விகளை அவர் கேட்டறிந்தார்.

அதற்கு பதிலளித்த மக்கள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த எங்கள் காணிகளை இராணுவத்தினர் உயர்பாதுகாப்பு வலயமாக வைத்திருப்பதுடன், அங்கு இராணுவக் குடியேற்றங்களையும் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர். அத்துடன் இதற்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

அதற்குப் பதிலளித்த பிரதமர், ‘இது தொடர்பாக அரசாங்கத்தினை வலியுறுத்தி உங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பேன்’ என்றார்.

Related Posts