வலி.வடக்கில் மக்களின் காணிகளில் மாட்டுத் தொழுவம் போடவும் கோழிப் பண்ணை நடத்தவுமா அரசு திட்டமிட்டுள்ளது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சுமார் 23 வருடங்களுக்கு மேலாக தமது சொந்த இடங்களில் சென்று மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள வலி.வடக்கு மக்களின் காணிகளை இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வைத்துள்ளனர்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘இந்த நிலையில் வலி.வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 6 ஆயிரம் ஏக்கர் காணியில் மூவாயிரம் ஏக்கர் காணி அரசிற்கு சொந்தமானது என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மிகுதி பொது மக்களுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் காணியில் மூவாயிரம் ஏக்கர் காணி அரசாங்கத்திற்கு சொந்தமானது என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். அத்தோடு மிகுதி பொது மக்களுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் காணிகளில் பல காணிகளை அரசிடம் வழங்க பொதுமக்கள் முன் வந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இது கண்டிக்கத்தக்கது என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் மக்களின் காணிகளுக்கு நட்டஈடு கொடுத்து அவர்களிடம் காணியைப் பெற்று அரசாங்கமும் சரி ஏனைய படைத்தரப்பினரும் சரி என்ன செய்யப்போகின்றனர்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அல்லது அரச காணி எனக்கூறும் மூவாயிரம் ஏக்கர் காணியில் என்னதான் செய்யப் போகின்றனர்?
வலி.வடக்கில் மக்களை மீளக்குடியேறவிடாது அவர்களின் காணிகளை பிடித்து வைத்துக் கொண்டு இருக்கும் அரசிடம் நான் பகிரங்கமாக கேட்கின்றேன்.
அந்தக் காணிகளில் மாட்டுத் தொழுவமும், கோழிப் பண்ணையும் நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளீர் எனக் கேள்வி எழுப்பினார்