வலி வடக்கில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன்: சஜீவன்

sajeepanவலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் சன்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார்.

மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் உள்ள இரண்டு பகுதியிலும் கடற்படையினருக்கு ஒதுக்கப்பட்ட காணி என்று விளம்பரப்படுத்தக்கட்ட இடத்தில் இராணுவத்தின் பாதுகாப்பில் இவ்வாறான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கை காரணமாக வலி.வடக்கின் சில பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடையும் நிலை காணப்படுவதுடன் அயல்கிராமங்களான நகுலேஸ்வரம்,கொல்லங்கலட்டி,கருகம்பானை,பன்னாலை போன்ற கிராமங்களில் உள்ள குடி நீர் உவர் நீராக மாறிவருகின்றது.

இவ்வாறான நிலை தொடர்ந்து நீடிக்குமாக இருந்தால் அயல் கிராமங்களில் மீள்குடியேறிய மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் இதனால் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கையினை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts