வலி.வடக்கில் சிறுமி மீது துஷ்பிரயோகம்

வலி.வடக்கில் வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று, வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டதுடன், வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமி ஒருவரையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, சிறுமியை மீட்ட பொலிஸார், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts