வலி.வடக்கில் காணி அளவீடு நிறுத்தம்; திரும்பியது நிலஅளவைத்திணைக்களம்

வலி.வடக்கில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட இருந்த தனியார் காணிகள் அளக்கும் நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

photo-5(5)

வலி.வடக்கில் இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளில் 183 ஏக்கரை கடற்படை தங்களது தேவைக்காக எடுத்துக் கொள்ளும் நோக்கில் இன்று நில அளவீட்டுக்காக நில அளவைத் திணைக்களத்தை அழைத்திருந்தது.

எனினும் குறித்த காணிகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த காணி அளவீடு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த அளவீடு தொடர்பில் உத்தியோக பூர்வமாக காணி உரிமையாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும் இன்று காலை கீரிமலையில் ஒன்று திரண்ட காணி உரிமையாளர்கள் 29 பேரும் அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன்,வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், பா. கஜதீபன் , வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர்கள் கடற்படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரத்துக்குப்பின்னர் அளவீடு நிறுத்தப்பட்டு அளவீட்டாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Related Posts