வலி வடக்கின் மீள் குடியேற்றம் மிகவிரைவில்

வலி வடக்கின் மீள் குடியேற்றம் மிகவிரைவில் இடம்பெறும் என, தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவின் பணிப்பாளர் நாயகம் மாளியக்க தெரிவித்ததாக, வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கான மீள்குடியேற்றத் தலைவர் தனபாலசிங்கம் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

அப் பகுதியில் காணப்படும் துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதுறைகள் என்பன மிகவிரைவில் விடுவிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார்.

வலி வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மயிலிட்டி கடற்தொழிலாளர்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரிக்கையை, நேற்று யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவின் பணிப்பாளர் நாயகம் மாளியக்கவிடம் தனபாலசிங்கம் கையளித்தார்.

அதன்பின்னர் கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Posts