Ad Widget

வலிகிழக்கு பிரதேச சபை முன் பொதுமக்கள் ஆர்பாட்டம்

புத்தூர், ஏரந்தணை பகுதியில், வயல்காணிகளில் மண் நிரவி கட்டடம் அமைக்கும் தனியார் ஒருவரின் வேலைத்திட்டத்துக்கு, புத்தூர் பிரதேச சபையின் செயலாளர் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள், நேற்று புதன்கிழமை (19) காலை பிரதேச சபையின் அலுவலகத்தினை திறக்கவிடாது முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

capture

புத்தூர் சந்தியில் இருந்து பேரணியாக நடந்து வந்த அப்பகுதி மக்கள், காலை 7 மணியளவில் புத்தூர் பிரதேச சபையின் அலுவலகத்துக்கு ஊழியர்களை உள்ளே செல்லவிடாது ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

‘வயல் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள தனிநபரொருவர், அவ் காணியுடன் இணைந்து வெள்ளம் செல்லும் வாய்க்காலுக்கு மண்ணைநிரவியும், குறித்த வயல் காணியில் மண் நிரவியும் கட்டடம் ஒன்று அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இச்செயற்பாட்டுக்கு புத்தூர் பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வெள்ளநீர் வழிந்தோட வழியின்றி ஊரிலுள்ள வீடுகளுக்குள் தேங்கும் நிலை ஏற்படும். தற்போது மழை காலமாகையால் மழை நீர் வழிந்தோட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டம் கட்ட வழங்கிய அனுமதியினை இடை நிறுத்தவேண்டும்’ என்றனர்.

Related Posts