வலிகாமம் வடக்கு மக்களின் வழக்கு விசாரணைக்கு வருகிறது

Supreme-Court-buildingவலிகாமம் வடக்கு பொதுமக்களின் காணி சுவீகரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதென்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கை யாழ்ப்பாணத்தின் 1474 பொதுமக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இராணுவ பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படவுள்ள சுமார் 6381 ஏக்கர் காணிகள் காரணமாக தமது வாழ்விடங்கள் இழக்கப்படுவதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Related Posts