வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடமையாற்றிய 624 ஆசிரியர்களுக்கு உள்ளக இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளதாக வலிகாமம் கல்வி வலயப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா தெரிவித்தார்.
இதற்கமைவாக, 2014 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பப்பிரிவில் கடமைபுரியும் ஆசிரியர்களுக்கும் இரண்டாம் கட்டமாக 2014 ஜனவரி 15ஆம் திகதி இடைநிலைப்பிரிவு மற்றும் உயர்தரப்பிரிவில் கடமைபுரியும் ஆசிரியர்களுக்கும் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேற்படி இடமாற்றங்களானது, ஆசிரியர்களின் போக்குவரத்தை கருத்திற்கொண்டு அவர்களின் வீடுகளுக்கு அண்மித்த பாடசாலைகளுக்கே இடமாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
இந்த இடமாற்றங்கள், இடமாற்ற சபையின் அங்கீகாரத்துடனும் பாடசாலை அதிபர்கள், பாடசாலை பாட ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோரின் அனுமதியுடன் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.