வற் வரியில் 400 கோடி ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட தேசிய வருமான வரி திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் குணசிறி டி சொய்சா ஜயதிலகவுக்கு 1198 கோடி ரூபா அபராதம் விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம் 102 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்கவினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்டு 34 குற்றச்சாட்டுக்களுக்கு மூன்று வருடங்கள் என்ற அடிப்படையில் 102 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதிமன்ற வரலாற்றில் மிகவும் கூடியதொகை தண்டம் விதிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.