வற்றாப்பளைக்கு குண்டுடன் சென்றார்களா?: வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் கைது!!

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம் திருவிழாவிற்குச் சென்றவர்கள் குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழ் வடமராட்சியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஐவரே பளைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல்த் திருவிழாவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரால் வழிமறிக்கப்பட்டனர். இதன்போது, பொலிஸாருக்கும் வானில் பயணித்தோருக்குமிடையே வாய்த் தர்க்கம் ஏறபட்டுள்ளது. பின்னர் வாகனத்தை சோதனையிட்ட போது குண்டு மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

எனினும், குடும்பத்தினர் இதை மறுத்துள்ளனர். பொலிசாருடன் தர்க்கப்பட்டதன் அடிப்படையில், பொலிசாரே வானில் குண்டை வைத்து விட்டு பொய் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் பொலிஸார் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களது வீடுகள் வல்வெட்டித்துறையில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts