வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க திட்டம்!

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் இந்த திட்டத்தினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான உத்தேச திட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்றுள்ளது.

சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கான தகைமைகளை பூர்த்தி செய்தும் அது கிடைக்காத குடும்பங்களில் மேலதிக கல்வியைத் தொடர முடியாதுள்ள பிள்ளைகளுக்காக பலநோக்கு அபிவிருத்தி செயலணியின் கீழ் இந்த தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து தலா 300 தொடக்கம் 350 பேர் வரை இந்த செயலணிக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இவர்கள் பாடசாலை மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களில் அடிப்படை கல்வித் தகைமை தேவைப்படாத வெற்றிடங்களுக்கு பயிற்சிகளின் பின்னர் நியமிக்கப்படவுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படையினரின் கண்காணிப்பின் கீழ் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

Related Posts