வறுமையின் காரணமாக தொழிலிற்கு சென்ற சிறுவன் சடலமாக வீடு திரும்பிய அவலம்!!

முல்லைத்தீவு பாலிநகர்ப் பகுதியில் யுத்தத்தில் தந்தையை இழந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக 16 வயதில் தொழிலிற்காக கொழும்பு சென்ற நிலையில் நேற்றைய தினம் சடலமாக வீடு திரும்பிய அவலம் நிகழ்ந்த்து.

குறித்த சம்பவத்தில் பாலிநகரைச் சேர்ந்த விக்கினேஸ்வரன் – வினோதன் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பி்தேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பாலிநகரில் வசிக்கும் குறித்த சிறுவனின் தந்தை போர் உச்ச காலத்தில் 2007ம் ஆண்டில் வவுனியாவில் தனித்திருந்த நிலையில் மன விரக்தியில் நஞ்சருத்தி தற்கொலை புரிந்துள்ளார். இவ்வாறு தந்தை உயிரிழந்த நிலையில் இரு சிறுவர்களுடன் தாயார் குடும்ப்ப்பாரத்தினை சுமந்து பெரும் நெருக்கடியான நிலையில் இரு சிறுவர்களையும் கற்பித்து வந்தார்.

இருப்பினும் தாயாருக்கும் எந்த தொழிலும் அற்ற நிலையில் சிறுவர்களை வளர்ப்பதற்கு பெரும் சிரம்ப்படுவதனை அவதானித்த வீட்டின் மூத்த சிறுவனாகிய வினோதன் 15 வயதிலேயே பாடசாலைக் கல்வியினை இடை நிறுத்தி நண்பர்களின் உதவியுடன் ஓர் ஒப்பந்த நிறுவனத்தின் கட்டுமான பணியில் இணைந்துள்ளான். குறித்த சிறுவனின் வயதினைக் காரணம் காட்டி சிறுவன் என்ற அடிப்படையில் வேலைக்கு அமர்த்த மறுத்த நிறுவனமோ இறுதியில் குடும்ப வறுமையின் காரணமாக இணைத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 9 மாதங்களிற்கும் மேலாக பணிபுரிந்த சிறுவனின் ஊதியம் தாயாரின் குடும்ப வறுமையை போக்கும் பங்கிணை ஈடு செய்திரிந்த சமயம் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் திருகோணமலையில் ஓர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தான். அங்கே 3ம் மாடியில் பணியாற்றிய சமயம் குறித்த சிறுவன் தவறி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான். அவ்வாறு சேர்க்கப்பட்ட சிறுவனின் உயிர் நேற்று முன்தினம் 20ம் திகதி பிரிந்துள்ளது.

இதனால் குறித்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Related Posts