கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 80 வறிய நோயாளர்கள், நோய் சிகிச்சை பெற செல்வதற்காக பிரயாண கொடுப்பனவனவாக தலா 1,500 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோயாளர்களுக்கு பிரயாண கொடுப்பனவு வழங்குவதற்கென யுனிசெவ் நிறுவனம் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வறிய நிலையிலிருக்கும் நோயாளிகள், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய தூர இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதற்காக இந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில். கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 47 பேருக்கும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 26 பேருக்கும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 7 பேருக்கும் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
புற்றுநோய், தொழுநோய் சிகிச்சை பெற செல்வோர் மற்றும் சத்திரச்சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக செல்லும் நோயாளர்கள் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக திணைக்கள தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.