வர்த்தக கண்காட்சியில் ஒரு கோடி லாபம்

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் மூலமாக ஒரு கோடியே ஐந்து லட்சத்து ஒன்பது ஆயிரத்து இரண்டாயிரத்து இருநூற்று இருபது ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் நிதி திட்டமிடல் அதிகாரி தெரிவித்தார்.

பொருளாதார ரீதியான சந்தை வாய்ப்பினையும் மக்களின் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியினை மேன்படுத்துவதற்கான ஆரம்பிக்கப்பட்ட 08 ஆவது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி மூலம் இந்த அளவு நிதி ஈட்டப்பட்டுள்ளது.

இந்தளவு நிதியானது மக்கள் நலன் சார்பாக முக்கிய விடயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சென்ற ஆண்டினை விட தற்போது வருமானம் கணிசமாக உயர்வடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொழிற்துறை மன்றங்கள் ஊடாக பெண்கள் தலைமைத்துவம் உடைய குடும்பங்கள், மற்றும் சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்கள், கைத்தொழில் மேன்பாட்டாளர்கள் போன்றவர்களுக்கான தொழிலின் உற்பத்தியாக பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts