வருமானம் குறைந்த குடும்ப மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

Alunar-school-eventவடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், யாழ். தீவக வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்ற வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

காரைநகர் நகர் கல்லூரி மண்டபத்தில் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர்; ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தார்.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் தீவக வலயத்தைச் சேர்ந்த 500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

தீவக வலயத்தில் உள்ள 61 பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த தவணை ஆரம்பத்தில் காலணிகள் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். மேலும், தற்போது பாடசாலை மாணவர்களுக்கு பசுப் பால் விநியோகிக்கப்படுவதாகவும் இவ்வாறு பசுப் பால் விநியோகிக்கப்படாத பாடசாலைகளுக்கு விரைவில் பசுப் பால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts