வருகின்ற 20ம் திகதி முதல் புதிய மாற்றத்துடனான மின்கட்டணம்

ceylon_electricity_boardகடந்த மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் அறிவித்ததமைக்கு அமைவாக புதிய மாற்றத்துடனான மின்கட்டண அறவீடு வருகின்ற 20ம் திகதிமுதல் அமுலுக்கு வருமென பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஜயதிஸ்ஸ டி கொஸ்தா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஜனாதிபதி அறிவித்தமைக்கு அமைவாக, முதல் 60 மின்அலகுகளைப் பயன்படுத்தும் பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்றும்,90 அலகுகள் முதல் 95 அலகுகள் வரையான மின் பாவனையாளர்களுக்கு நிவாரணக் கட்டணத்தில் சீராக்கல் வழங்கவும்,180 அலகுகள் வரையான மின் பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் மின்பாவனையாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க முடியும். இதற்கமைய ஜனாதிபதி இரண்டு வகையான நிவாரணங்களை அறிவித்துள்ளார் என்றும் ஆணைக் குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார். அதேநேரம், ஜனாதிபதி அவர்கள் அறிவித்த நிவாரணத்துடனான புதிய மின்கட்டண அறவீட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருப்பதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts