வரி குறைப்பு மகிழ்ச்சிக்குரியதாகும் : இணைய தள ஊடகவியலாளர்கள்

இணையதளத்திற்காக அறவிடப்பட்ட வரி குறைக்கப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிப்பதாக இணைய தள ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த கட்டணத்தை இலகுவாக செலுத்தக்கூடிய வசதிகளையும் ஏற்படுத்திககொடுக்குமாறும் இணையதள ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

அரச தகவல் திணைக்களத்தில் நடைபொற்ற செய்தியாளர் மகாநாட்டில் இணைய தள ஊடகவியலாளர்கள் இவ்வாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இவ்வாறான வரி குறைப்பு நடவடிக்கையின் மூலம் தமது தொழிற்றுறையை முன்னெடுக்க வசதி கிட்டுவதுடன், எதிர்காலத்தில் ஒழுக்க விதிமுறைகளுடன் இத்தொழிற்றுறையை இலகுவாக முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் இவர்கள் சுட்டிக்காட்டினா.

அதுமாத்திரமின்றி ஒழுக்கவிழிமியங்களுடனான இணைய தள செயற்பாடுகள் இடம்பெற்க்கூடியதாக இருக்கும் என்றும் இவர்கள் தெரிவித்தனர்.

Related Posts