புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
மேலும் மக்கள் விடுதலை முன்னணி இதற்கு எதிராக வாக்களித்ததோடு, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 13 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஆறுமுகன் தொண்டமான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த வரவு செலவுத்திட்ட யோசனையை கடந்த மாதம் 20ம் திகதி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.