வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று!

புதிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று (21) பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கானதும் நாட்டின் 69 ஆவதுமான வரவுசெலவுத் திட்டத்தினை நேற்று (20) நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் வரவுசெலவுத் திட்டம் மீதான உரையை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(21) காலை 9.30 க்கு பாராளுமன்றம் கூடியபின்னர், 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக 9 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.

Related Posts