நாட்டிலுள்ள புராதன, வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களை அழிப்பது திருத்தப்பட்ட புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்குக் குறையாத தண்டனை பெறும் குற்றச் செயல் என தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படும் ஒருவரின் உடைமைகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் எனவும் அச்சட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படும் விதமான மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நோக்கப்படும்.
இந்த மாற்றங்கள் புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது