வரலாற்றில் என்றுமில்லாதவாறு டொலரின் பெறுமதி அதிகரிப்பு

இந்நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 152 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மத்திய வங்கிய நேற்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 152 ரூபா 12 சதமாக அதிகரித்துள்ளது.

கடந்த அண்மிய காலத்தில் டொலரின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வந்துள்ளதைக் காட்டுவதாகவும் கூறப்படுகின்றது.

வங்கிகளில் அமெரிக்க டொலர் பற்றாக்குறை நிலவுவதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வங்கிகளில் டொலர் பற்றாக்குறை இல்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts