வரணி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி படையினருக்கு விற்பனை!

land-sold-saleகொடிகாமம் வரணி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி 522 ஆவது படைப் பிரிவுக்கு விற்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இந்த 7 ஏக்கர் காணி, படையினரின் தேவைக்கானது எனக் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த 7 ஏக்கர் காணியும் இரண்டு உரிமையாளர்களுக்கு சொந்தமானது. இந்தக்காணியை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் சம்மதித்துள்ளனர் என பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி என்பதால் வேறு யாரும் அதனை வாங்க முன்வரமாட்டார்கள் என்பதால் விற்பதற்குச் சம்மதித்ததாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Related Posts