வரணி சிமிழ் கண்ணகி ஆலயத்தில் சத்தியாக்கிரகம்!

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் அனைத்து சமூக மக்களிற்கும் சமத்துவம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இன்று காலை சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கான வெகுஜன இயக்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த போராட்டத்தில், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமாரும் கலந்து கொண்டு, தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஆலயத்தின் திருவிழாவில் ஒரு சமூகத்தினர் தேர் இழுக்கக்கூடாது என்று குறிப்பிட்டு, கடந்த வருடம் இயந்திரத்தால் இந்த ஆலயத்தில் தேர் இழுக்கப்பட்டதும், இந்த வருடம் திருவிழாவே நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts