வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் இன்று வழிபாடு!

உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய வைகாசி விசாக மடை வழிப்பாட்டுக்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.

நீண்ட காலத்துக்கு பின்னர் இராணுவ அனுமதி கிடைத்தமையால் பெருமளவான மக்கள் ஆலயத்துக்கு செல்வதற்காக வயாவிளான் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக கூடினர்.

இதன்போது உயர் பாதுகாப்பு வலய எல்லையில் பதிவுகளை மேற்கொண்டே மக்கள் உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆலய வழிபாட்டுக்கு சென்ற மக்கள் கைத்தொலைபேசி மற்றும் ஒளிப்படக்கருவிகளை இராணுவத்தினர் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

இதேவேளை ஆலயத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் நீண்டநேரம் காத்திருக்கவேண்டி ஏற்பட்டது. பின்னர் ஒருமணி நேரம் தாமதமாக உள்ளே செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Related Posts