வன்முறையில் ஈடுபடுவோர் மீது மரணத்தை ஏற்படுத்தும் வரையில் துப்பாக்கிச் சூடு!! : பொலிஸ் எச்சரிக்கை

“உள்ளூராட்சி சபைகள் தேர்தலின் போது வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது, தண்டனை சட்டக் கோவையில் உள்ளவாறு ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வரையில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமான சூழ் நிலைகள் ஏற்படுமாயின் அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்”

இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தேர்தல்கள் சட்ட திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்த கையேடு ஒன்றையும், பொலிஸ் தலைமையகம் தயார் செய்துள்ளது. அந்தக் கையேட்டின் பிரதிகள் அடுத்து வரும் நாள்களில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts