வன்முறைச் சம்பவங்கள் இல்லாத காரணத்தினால் தேர்தல்களை சுயாதீனமாக நடத்த முடியும்!- தேர்தல் ஆணையாளர்

vote-box1[1] (1)வடக்கில் வன்முறைச் சம்பவங்கள் இல்லாத காரணத்தினால் தேர்தல்களை சுயாதீனமாக நடாத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

வடக்கு தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் கோரப்பட்டதன் பின்னரே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது குறித்து தீர்மானிக்க முடியும்.

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

யார் என்ன சொன்னாலும் வட மாகாணசபைத் தேர்தலை சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts