வன்னியில் பன்றிக் காய்ச்சல், பீடிக்கப்பட்ட மூன்று பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா, மாங்குளம் மற்றும் பெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் சிறுவர்கள் மூவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றவர்கள், அருகில் உள்ள அரச வைத்தியசாலையை உடனடியாக நாடி, உரிய பரிசோதனை மற்றும் சிகிசை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.