Ad Widget

வன்னித் தேர்தல் தொகுதியில் இளைஞர்களுக்கு கூட்டமைப்பு வாய்ப்பளிக்கவில்லையாம்!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னித் தேர்தல் தொகுதியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என இளைஞர் கழகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

வேட்பாளர்களில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வரும் நிலையில் கூட்டமைப்பு இளைஞர்கள் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை.

குறிப்பாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற கதிரையில் இருந்து வயது முதிர்ந்தவர்களும் அவர்களுக்கு நிகராக வெளியில் இருந்த வயது முதிர்ந்தவர்களுமே உள்வாங்கப்பட்டுள்ளனர்.

35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் பலர் போட்டியிட ஆர்வம் செலுத்துகின்றபோதும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மாறாக இளைஞர்களை போஸ்ரர் ஒட்டுவதற்கும், துண்டுபிரசுரங்களை விநியோகிப்பதற்கும் மட்டும் பயன்படுத்தவே கூட்டமைப்பு முனைகின்றது.

இதன் காரணமாகவே பல இளைஞர்கள் இன்று அரசியல் ஈடுபாடற்று வேறு கட்சிகளை சார்ந்து செல்கின்றனர் எனவும் இளைஞர் கழகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

Related Posts