வதிரி கொலை சந்தேக நபருக்கு பிணை

judgement_court_pinaiயாழ். வடமராட்சி வதிரி பகுதியில் நபர் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபருக்கு யாழ். மேல்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வடமராட்சி வதிரி பகுதியில் சிவஞானம் சிவரூபன் என்பவரை பொல்லால் தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வதிரி மெத்த பிள்ளையார் கோவில் பகுதியைச் சோந்த கிருஸ்ணன் ரவிச்சந்திரன் மற்றும் வேலாயுதம் சுதாகர் ஆகிய இருவரும் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, முதலாம் சந்தேக நபர் கிருஸ்ணன் ரவிச்சந்திரனுக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணி எஸ். சிவநேசனினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளரினால் இன்று பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசீலணையின் பின்னர் இன்று 50 ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும், 2 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிமுதல் 12 மணி வரைக்குள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

Related Posts