வதந்தியே உண்மையானால் பெரிய சந்தோசம்!- ஐஸ்வர்யா

அட்லி இயக்கத்தில் ‘தெறி’ படத்தில் நடித்துள்ள விஜய், அடுத்தபடியாக ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.

Iswarya-rajes-1

குடும்பப் பாங்கான கதை கொண்ட அந்த படத்தில் விஜய் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதோடு, அவருக்கு அப்படத்தில் மூன்று நடிகைகள் ஜோடி என்றும், அந்த வேடங்களில் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாகவும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன.

ஆனால், விஜய் படத்தில் தான் நடிப்பதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். விஜய்யின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக, அவரது நடனத்தை ரொம்பவே ரசிப்பேன். அதனால் அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்து வருகிறது.

ஆனபோதும், விஜய்யின் 60வது படத்தில் நடிப்பதுபற்றி அந்த படக்குழுவில் இருந்து இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. அதனால், நான் விஜய் படத்தில் நடிப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. அதேசமயம், இந்த வதந்தியே உண்மையானால் அதை விட பெரிய சந்தோசம் எதுவுமில்லை என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Related Posts