விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த கமல், தற்போது உத்தமவில்லன் நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு நூற்றாண்டு கதைக்களத்தில் உருவாகி வரும் அப்படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது வெளிநாடு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இப்படத்தை முடித்து விட்டு இன்னும் ஓரிரு மாதத்தில் த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கிறார் கமல்.
இந்தநிலையில, தற்போது மலையாளத்தில் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் மோகன்லால், ஆண்ட்ரியா நடித்துக்கொண்டிருக்கும் பெருச்சாழி என்ற படத்தின் கதை கமலுக்கு பிடித்து விட்டதாகவும், அதன்காரணமாக அப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் ஒரு செய்தி சில நாட்களாக கோடம்பாக்கத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த செய்தியை தற்போது கமல் தரப்பு மறுத்துள்ளது. பெருச்சாழி படத்தின் கதையும் கேட்கவில்லை. நடிக்கவும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும், தற்போதைய நிலவரப்படி உத்தமவில்லனை முடித்து விட்டு, அடுத்து த்ரிஷ்யம் ரீமேக்கில் மட்டுமே கமல் நடிக்க ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.