வட மாகாண விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடல்

வட மாகாண சபையின் கல்வி கலாச்சார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா அவர்கள் விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

sports-meeting

பிரதேச, மாவட்ட ரீதியான விளையாட்டு துறைசார் அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும் 2014 ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய போட்டிகளுக்குரிய திட்டங்களை வகுத்து சிறந்த விளையாட்டு வீரர்களை இனங்கண்டு பயிற்சிகள் வழங்கி வடமாகாணத்தில் திறமையான வீரர்களை உருவாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. சி.சத்தியசீலன், மாகாண விளையாட்டு பணிப்பாளர் எஸ்.எம்.ராஜா ரணசிங்க, கல்வி கலாச்சார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் உயர் அதிகாரிகள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுனர்கள், மாவட்ட விளையாட்டு இணைப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டார்கள்.

Related Posts