வட மாகாண வாகனங்களுக்கு புகைப் பரிசோதனை

car-smokeவடமாகாணத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டர் பதிவுகள் ஆணையகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

வடமாகாணத்தில் புகை பரிசோதனை இதுவரையில் மேற்கொள்ளப்படாமையால், அங்கு சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து அவதானம் செலுத்த வேண்டி உள்ளது.

இந்த நிலையில் புகைப்பதிவினை மேற்கொள்ளாத வாகனங்களின் பதிவுகள் வழங்கப்பட மாட்டாது என்றும் ஆணையகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் புகைப்பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் இருக்கின்ற நிலைகளில் இந்த விடயத்தில் வடமாகாணத்தில் சிக்கல் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படாதுள்ள நிலையில், வடமாகாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கி வருகின்ற வாகனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts