வட மாகாண முதலமைச்சர் என்ன கூறினாலும் பாராளுமன்றமே இறுதித் தீர்மானத்தை எடுக்கும்: பிரதமர்

வட மாகாண முதலமைச்சர் என்ன கூறினாலும் பாராளுமன்றமே இறுதித் தீர்மானத்தை முன்னெக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வட மாகாண முதலமைச்சரின் அறிவிப்பு தொடர்பில் தினேஷ் குணவர்தன எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்த வினாவுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறினார்.

விக்னேஷ்வரன் என்ன அறிவிப்புச் செய்திருந்தாலும் நாம் எமக்குத் தேவையான பிரகாரம் அரசியல் யாப்பை அமைப்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேண்டுகோளை முன்வைப்பார்கள். நாம் அனைவரும் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து எடுக்க வேண்டிய தீர்மானத்தை எடுப்போம் எனவும் பிரதமர் மேலும் கூறினார்.

Related Posts