வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள், முதலமைச்சர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள் சிலர், கொழும்பிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
182 தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளபோதும், வடக்கு மாகாண முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தில் இந்த நியமனங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்தே, குறித்த போராட்டத்தை வடக்கு மாகாண தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான தொண்டராசிரியர்கள் முன்னெடுத்துள்ளனர்.