வட.மாகாண சபை கேலிக்குரியதாக மாறியமைக்கு ஆளுங்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களே காரணமென வட மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசேட அமர்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆயுத போராட்டங்கள் ஊடாக பெறப்பட்ட குறைந்தபட்ச அதிகாரங்கள் கொண்ட மாகாணசபை, ஆளுங்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஒழுங்கற்ற செயற்பாட்டினால் கேலிக்குறிய ஒன்றாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் வடக்கில் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் எவரும் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. ஆனால் தங்களின் நலன்களுக்காகவே அமைச்சர்கள் செயற்படுகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு அமைச்சர்கள், தங்களின் நலன்களுக்காக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த மறந்து விட்டார்களெனவும் தவராசா குறிப்பிட்டுள்ளார்.