வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பிணையில் விடுதலை

முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (10) மாலை அவர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன் போது, பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளமை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் நேற்று கைது செய்யப்பட்டார்.

Related Posts