வட. மாகாண சபை உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை – சீ.வி.கே.சிவஞானம்

CVK-Sivaganamவடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கும்படி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களை கடிதம் மூலம் கோரியிருக்கின்றார் வடக்கு மாகாண சபையின் அவை முதல்வர் சீ.வி.கே.சிவஞானம்.

‘பல உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு செய்துள்ளனர்.

இயலுமானால் அவர்களுக்கு தனியான மெய்க்காவலர்களை வழங்கி உதவுங்கள். குறைந்த பட்சம் அவர்களது இருப்பிடங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குங்கள். ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியும் பாதுகாப்பு அளியுங்கள்.’ – இவ்வாறு அவர் தமது கடிதத்தில் கோரியிருக்கின்றார் என்று தெரிய வருகின்றது.

Related Posts