வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பயிற்சிப் பட்டறை

DSCF4954அரசியல் அமைப்பு கற்கைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு கற்கை தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்று யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த பயிற்சி பட்டறையில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அரசியலமைப்பு கற்கைநெறி நிறுவனத்தின் ஆலோசனை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, அரசியலமைப்பு குறித்த கருத்துரைகளை வழங்கினர்.

இப்பயிற்சி பட்டறையில், வடமாகாண பிரதம செயலாளர் விஜயலக்சுமி ரமேஷ், வட மாகாண சபை தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts