வடமாகாண சபையில் பேசப்படுகிற சிக்கலான விடயங்கள் குறித்து மாகாண ஆளுநருடன் பேச உள்ளதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞான ம் சபைக்கு கூறியிருக்கும் நிலையி ல் அந்த உரிமை அவை தலைவருக்கு உண்டா? என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எவ்வாறாயினும் அவை தலைவருக்கு அந்த அதிகாரம் உண்டு என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
வடமாகாண சபையின் 70ம் அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.
இதன்போது பேசிய அவைதலைவர் சிவஞானம் உறுப்பினர்கள் சபையில் பேசும் சில சிக்கலுக்குரிய விடயங்கள் தொடர்பாக ஆளுநர் றெஜினோல்ட் கூறேயுடன் பேசவுள்ளதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் எழுந்து அவை தலைவருக்கு அந்த உரித்து உண்டா? என கேள்வி எழுப்பினார்கள்.
இந்த நிலையில் சபையில் பேசிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அவை தலைவருக்கு அந்த உரித்து முழுமையாக உள்ளது என கூறினார்.
அவைத் தலைவர் பேசும் விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் எமக்கு தெரியப்படுத்துங்கள் என கூறினார்.
இதற்கு மீண்டும் பதிலளித்த அவைத் தலைவர் அதற்கான திகதியை கோரியிருப்பதாகவும் பேச்சு நடந்தால் கூறுவேன் எனவும், ஆளுநருடன் பேசப்படும் விடயங்களை சபைக்கு அறிவிப்பேன் எனவும் கூறினார்.
இதேவேளை, தமிழ் மக்கள் திருப்திப்படும் அரசியல் யாப்பு வெளிவரப்போவதில்லை என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் சுட்டிக் காட்டினார்.
இன்றைய சபை அமர்வில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டது.
அதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அதிகாரத்தின் ஊடாக ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். அனால், ஆளுநர்களே இருக்கக் கூடாது என தெரிவிக்கின்றோம்.
அந்தவகையில், மத்திய மாகாண ஆளுநருக்கும் எனக்கும் இடையில் வானொலி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் முகமாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அந்த கலந்துரையாடலின் போது, மத்தியமாகாண ஆளுநரின் கருத்துக்களை பார்க்கும் போது, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் யாப்பு எந்தக்காலத்திலும் வெளிவரப்போவதில்லை என்றும் தமிழ் மக்களின் சம்மதம் அந்த அரசியல் யாப்பிற்குள் இருக்காது என்றும் சுட்டிக் காட்டினார்.