வட மாகாண சபையில் நிறைவேற்ற மறுக்கும் தீர்மானங்கள்

CVK-Sivaganamவடக்கு மாகாண சபையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றவென உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட பிரேரணைகளில் சில வழக்கம் போன்று அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 28ஆம் திகதி மாகாண சபை மீண்டும் கூடுகின்றது. இதில் விவாதிக்கப்பட்டுத் தீர்மானமாக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்த முன்மொழிவுகள் உறுப்பினர்களால் பேரவைச் செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதில் சி.வி.கே. சிவஞானத்தால் நிராகரிக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்…

  • தமிழ் இளைஞர் யுவதிகளைக் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் இணைத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும், வடக்கில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கைது நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது ஆகிய தீர்மான முன்மொழிவுகளே நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த முன்மொழிவுகள் இரண்டும் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்டிருந்தன.
  • உறுப்பினர் சர்வேஸ்வரனால் முன்வைக்கப்பட்ட, வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு உணவு விநியோகிப்பதில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளை விசாரிப்பதற்கான குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று கோரும் தீர்மான முன்மொழிவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
  • உறுப்பினர் சிவாஜிலிங்கத்தால் முன்மொழியப்பட்ட, ஜெனிவாவில் இலங்கை அரசு தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கான முன்மொழிவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related Posts