வட மாகாண ஆளுநரின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையின் ஆலோசகராக திரு.எதிர்வீரசிங்கம் !

வட மாகாண சபைக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்றய தினம் நடைபெற்றது.

வட மாகாண ஆளுநரின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறையின் ஆலோசகராக திரு.நா.எதிர்வீரசிங்கமும், வட மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்புத் திணைக்கள ஆணையாளராக ரி.உமாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நியமன கடிதங்களை ஆளுநர் வழங்கினார்.

ஆளுநரின் செயலாளர் திருஇ.இளங்கோவன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடியவர்.இலங்கையின் முன்னணி உயரப்பாய்தல் வீரராகவும், சாதனையாளராகவும் திகழ்ந்தவர். அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் இலங்கைக்கு முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தவர். 1958ல் ஜப்பானில் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், உயரப்பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்றவர்.

முதலில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும், பின்னர் கொழும்பு சாந்த ஜோசப் கல்லூரியிலும் பயின்ற இவர் கல்லூரி மாணவனாக இருந்தபோதே அகில இலங்கை சாதனையை முறியடித்திருக்கிறார். தற்போது இவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இவரது உடன்பிறந்தவர்களான என். ராஜசிங்கம், என். பரராஜசிங்கம், என். செகராஜசிங்கம் ஆகியோரும் கல்லூரிக்காலத்தில் பரவலாக அறிந்த விளையாட்டு வீரர்களாக இருந்தவர்கள். இலங்கை, சியேரா லியோனி, பப்புவா நியூ கினி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யுனெஸ்கோவிலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

8370540536_02031fbb86
8369475355_893f48969e

Related Posts