வட மாகாண சபையில் தனியறைகள் ஒதுக்கீடு

வடமாகாண தவிசாளர், உப தவிசாளர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோருக்கு தனியான அறைகள் வட மாகாண சபைக் கட்டிடத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.

Room (1)

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியிலே இவ்வாறு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏனைய உறுப்பினர்களுக்கான அறைகள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய கட்டிடத் தொகுதியில் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண சபைக்குரிய கட்டிடத் தொகுதியில் ஒரு தொகுதிக்கான கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டு தற்போது வடமாகாண சபை அமர்வுகள் நடைபெற்று வருவதுடன், மிகுதிக் கட்டிடத் தொகுதிகள் அமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றது.

Related Posts