வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் இணக்கத்துடன் வமாகாணசபையின் தவிசாளர் சி. வி. கே சிவஞானம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகருக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படும் கடிதம் தொடர்பில் அகில இலங்கை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
சங்கத்தின் செயலாளர் ஜெயந்த பண்டார இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
வடக்கில் வெற்றிடங்களாகவுள்ள தமிழ் மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஏனைய கல்விசார் நடவடிக்கைகளுக்காக தமிழக மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் தந்துதவ வேண்டும் என்று இந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலங்கையில் ஏற்கனவே தமிழ் ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ஏனைய நாடுகளில் இருந்து மருத்துவர்களை தருவிப்பது வடமாகாணசபை தமது வரம்புக்கு அப்பால் செல்லும் நடவடிக்கையாகும் என்று மருத்துவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.