கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வட மாகாண சபையின் ஆளுனரால் வெளியிடப்படும் கருத்துகள் அந்த மாகாண சபையினால் வெளியிடப்படும் உண்மையான கருத்துகளாகுமா என்பது தொடர்பில் அரசியலமைப்பு ரீதியான சட்ட வியாக்கியானத்தை உயர் நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் பரிசீலனைக்கு எடுக்கும்.
அரசியலமைப்பு ரீதியான சட்ட வியாக்கியானம் கோரப்பட்ட மேன் முறையீட்டு நீதிமன்ற ரீட் மனுவையே ஒக்டோபர் 22ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை தீர்மானித்தது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் நீதியரசர்கள் கே. ஸ்ரீபவான், சந்திரா எக்கநாயக்க ஆகியோர் முன்னிலையில் இந்த விவகாரம் நேற்று எடுக்கப்பட்ட போதே பரிசீலனைக்கு எடுக்கும் திகதி தீர்மானிக்கப்பட்டது.
திவி நெகும சட்டமூலத்திற்கு எதிராக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான் விசாரணையின் போது எழுந்த அரசியலமைப்பு ரீதியான சட்டவியாக்கியான கேள்வியை அடுத்தே மேன் முறையீட்டு நீதியரசர் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா உயர் நீதிமன்ற வியாக்கியானத்தை கோரியிருந்தார்