வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு நினைவேந்தல்!

முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நாள், எதிர்வரும் 18ஆம் திகதி வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக வட. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், முள்ளிவாய்க்கால் மண்ணில் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்விற்கான ஒழுங்குகள் நடைபெற்றுவரும் அதேவேளை, இது குறித்து எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபை அமர்வின் பின்னர் விரிவாக கலந்துரையாடப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வட. மாகாண சபையினால் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts